திருமலையில், அம்கோர் நிறுவனத்தினால் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை!

தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனமான அம்கோர் நிறுவனம், இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் ஊடாக, திருகோணமலை மாவட்டத்தில், பல்வேறு நிலைகளில் பயிற்சி பட்டறைகள், விழிப்புணர்வு செயற்பாடுகள், கலந்துரையாடல்களை செயற்படுத்தி வருகின்றது.

இதன் ஒரு செயற்பாடாக, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, சமூக மட்ட அமைப்புகள், தொண்டரமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான, இலங்கையில் மனித வியாபாரம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி பட்டறை, இன்று குளக்கோட்டம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில், பட்டணமும் சூழலும் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், அம்கோர் நிறுவன ஊழியர்கள், ஐ.ஓ.எம் நிறுவன உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோக்தர்கள் பங்கு பற்றியிருந்ததுடன், 52 சமூக பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.

வளவாளராக வே.காண்டீபன் கலந்துகொண்டார். இதேபோன்று பயிற்சி பட்டறைகள், கிண்ணியா, மூதூர், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இடம்பெற்று வருவதாக, அம்கோர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!