பலாலி விமான நிலையம் தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் தொடர்பில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 80 பேர் கொண்ட குழுவினர், இன்று நேரில் ஆராய்ந்துள்ளனர்.


பலாலி விமான நிலையத்தில் இருந்து, விமான போக்குவரத்து ஆரம்ப சேவைகள் அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்காக அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. விமான நிலைய அபிவிருத்தியின் போது, ஓடுபாதைகள் சீரமைப்பு செய்யப்படுவதுடன், பயணிகள் விமான நிலையத்துக்குள் வருவதற்கு, காங்கேசன்துறை பக்கமாக உள்ள வீதி பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த அபிவிருத்தி பணிகளை பார்வையிட, கொழும்பில் இருந்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர், இன்று காலை பலாலிக்கு வருகை தந்தனர்.

அந்தக் குழுவில், சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், பொறியியலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அத்துடன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறியும் கலந்துகொண்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!