திருமலை மூதூரில், யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷாபி நகர் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில், யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த யானை, நேற்று இறந்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த யானையின் காலில், சிறிய காயமொன்று காணப்படுவதாகவும், அதற்காக கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால், சில தினங்களுக்கு முன்னர் மருந்து போடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த யானை தொடர்பில், கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!