சஜின்வாஸ் பிணையில் விடுதலை

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக 30 கோடிக்கு அதிகமான பணத்தை சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.

இதனை அடுத்து பிரதிவாதியை 5 இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதிவாதிக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறும் உத்தவிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!