கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது!

நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை நகரில், கழிவு தேயிலை தூள் கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்ட சந்தேகத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீண்ட நாட்களாக, நல்ல தேயிலை தூள்களுடன், கழிவு தேயிலை தூள்களை கலந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த இடத்திலிருந்து 200 கிலோ கழிவு தேயிலை தூளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களை நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிபடையினரும், தலவாக்கலை பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!