மோடி- ஷின்சோ அபே சந்திப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மங்கோலியா ஜனாதிபதி ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவர்களுக்கிடையிலான சந்திப்பின்போது இருதரப்பு உறவு குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்றுவரும் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பங்கேற்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

குறித்த அழைப்பை ஏற்று ரஷ்யாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள நரேந்திர மோடி நேற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!