களனிவௌி ரயில் பாதை ரயில் சேவையில் தாமதம்

களனிவௌி ரயில் பாதையில் மீகொட – பாதுக்க ரயில் நிலையங்களுக்கு இடையே வட்டரெக்க ரயில் நிலையம் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் ஒன்று செயலிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதன் காரணமாக களனிவௌி ரயில் வீதியில் பயணிக்கும் ரயில்கள் தாமதமாக பயணிக்ககூடும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவர அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!