சிறைத்தண்டனையை தளர்த்தக் கோரும், பாதாள உலக குழு தலைவன்

கஞ்சா வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்த குற்றச்சாட்டில், தனக்கு வழங்கப்பட்டுள்ள 6 வருட சிறைத்தண்டனையை தளர்த்துமாறு கோரி, பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் எனும் கஞ்சிபான இம்ரான், மேன்முறையீடு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி லக்?ஷமன் பெரேரா ஊடாக, மேன்முறையீட்டு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக, கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

5.3 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்த குற்றச்சாட்டில், தனக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தாக, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனை மிக அதிகம் எனவும், அதனால் அந்த தண்டனையை தளர்த்தி உத்தரவிடுமாறும், மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!