முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் விபத்து : சாரதி சம்பவ இடத்தில் பலி

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில், சாரதி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.


இன்று பிற்பகல் 4.40 மணியளவில், கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வீதிக்கு அண்மையில், ஏ9 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும், கிளிநொச்சியில் இருந்து முறிகண்டி நோக்கி பயணதித்த பேரூந்தும் விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன் போது, காரை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர், கிளிநொச்சி மாவட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவின் செயற்பாட்டாளராக இருந்த தீபன் என அழைக்கப்படும் லண்டன் பிரஜையே என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் பல்வேறு சிமங்களின் மத்தியில் மீட்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!