யாழில், இராணுவச் சிப்பாய் தற்கொலை முயற்சி!

விடுமுறை வழங்கப்படாத அதிருப்தியில், யாழ்ப்பாணம் தையிட்டி இராணுவ முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய், சக இராணுவ வீரர்களால் காப்பாற்றப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தையிட்டி இராணுவ முகாமில் கடமையாற்றும் 20 வயதுடைய நிசங்க எனும் இராணுவச் சிப்பாயே, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இராணுவச் சிப்பாய் ஆயுத விநியோகப் பகுதியில் கடமையாற்றி வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார்.

தனது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாத மன விரக்தியில், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பலாலி இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!