திருக்கோவில் தம்பட்டையில் விபத்து – 8 வயது சிறுவன் பலி

 

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பட்டைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் இன்று புதன்கிழமை முற்பகல் வேளையில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 8வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருமண வீடு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தாயுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டு இருந்த வேளை தம்பட்டை பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் நாய் வீதியை குறுக்கிட்ட வேளை முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகின்றன.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவனை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அங்கு சிறுவன் உயிரிழந்தள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளதுடன் முச்சக்கரவண்டி சாரதிக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்த சிறுவன் தம்பிலுவில் 01 வீசி றோட்டைச் சேர்ந்த சிசிகுமார் சிவசஞ்சயன் வயது 08 என உறவினர்கள் தெரிவித்துள்ளதுடன்,  விபத்து தொடர்பாக திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!