மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் மொஹமட் ஷாபி!

குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, குருணாகல் போதனா வைத்தியசாலை மகப்பேற்று மருத்துவ நிபுணர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரர், பொலிஸ் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அத்துரலிய ரத்ன தேரரர், குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கருத்தடை விவகாரம் தொடர்பில், வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக 900 க்கும் அதிகமான சிங்கள தாய்மார் முறைப்பாடு செய்துள்ளனர்.

இருப்பினும் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், ஷாபி குற்றம் புரிந்தவர் என்று தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என, குற்றப்பபுலனய்வு பிரிவினர் கூறியுள்ளதுடன், அவரை குற்றமற்றவராக சித்திரிக்கின்றனர்.

இந்த நிலையில் மாலினி என்ற தாயொருவர் சில வருடங்களுக்கு முன்னர், தனது குழந்தைக்கு நேர்ந்த அநியாயம் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளார்.

ஆயினும் அவ்விடயம் தொடர்பில் எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை. குழந்தை பிறந்தவுடன், நன்றாக பால் அருந்தியுள்ளது.

பின்னர் குழந்தைக்கு இதயநோய் உள்ளதாக கூறப்பட்ட போதிலும், சாதாரண வார்ட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது.

அந்த குழந்தையின் கால்களில் வெட்டுக்காயம் காணப்படுகின்றது. இது தொடர்பில் எவரும் கவனத்தில் கொள்ளவில்லை.

எனினும் இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு அளித்துளோம். பொலிசாரிடத்தில் சென்றால் அவர்கள் இந்த முறைப்பாட்டை பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில் தான் நாம் பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம். வைத்தியர் ஷாபியின் மீது மனித கொலை தொடர்பான குற்றச்சாட்டையே நாம் முன்வைத்துள்ளோம்.

ஆகவே இந்த குழந்தையின் காலில் உள்ள வெட்டுக்காயம் தொடர்பில், விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
ஏனெனில் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், இரண்டு விடயங்கள் மரணத்திற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில் எழுந்துள்ள சந்தேகத்தின் நிமித்தமே, இந்த முறைப்பாட்டை அளித்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் குழந்தைப்பேறும் அற்றுப்போயுள்ளது.

எனவே அவருடைய குழந்தையின் மரணம் இயற்கை மரணமாக இருக்க முடியாது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே தான் முறைப்பாடு அளித்துள்ளோம்.

இது தொடர்பில் தகுந்த விசாரணைகளை பொலிஸ் ஆணைக்குழு மேற்கொள்ளும் என நம்புகிறோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!