ஸ்ரீ.சு.கட்சியின் ஆதரவின்றி, யாராலும் ஆட்சியமைக்க முடியாது – மஹிந்த அமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவின்றி, யாராலும் ஆட்சியமைக்க முடியாது எனவும், நேற்று கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர கட்சி மாநாட்டில் ‘2020 இலும் நாமே ஆட்சியமைப்போம் என ஜனாதிபதி தெரிவித்தமைக்கு, அர்த்தம் இதுவே என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மிகுந்த ஆர்வத்துடன் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில், 2020 இலும் நாமே ஆட்சியமைப்போம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

நாட்டில் அடுத்து யார் ஆட்சியமைத்தாலும், அவர்களுக்கு எமது ஆதரவு நிச்சயம் தேவைப்படுகிறது. அதாவது சுதந்திர கட்சியின் ஆதரவின்றி யாராலும் ஆட்சியமைக்க முடியாது என்பதையே ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகார ஆசையுடையவர் அல்ல. எனவே தான் அவர் எந்த சந்தர்ப்பத்திலும் 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரித்தோ, நிறைவேற்றதிகார முறைமையை ஆதரித்தோ கருத்து வெளியிடவில்லை.

அதற்காக நாம் ஜனாதிபதி தேர்தலுக்கு அஞ்சுவதாகவும் கருத முடியாது. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!