153ஆவது பொலிஸ் தினம்!

153வது பொலிஸ் தின்தை முன்னிட்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

பொலிஸ் தினைக்களத்தின் 153வது பொலிஸ் தினம் இன்று நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனுஸ்டிக்கபட்டுவருகின்றது.

இந்நிலையில், ஹட்டன் பொலிஸ் வலையத்திற்குட்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர அம்பேபிட்டியவின் பணிப்புரைக்கு அமைய மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையில் இன்றய தினம் இரத்த தான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கபட்டது.

இதன் போது அரச உத்தியோகத்தர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மதகுரு மார்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.

சேகரிக்கப்படுகின்ற இரத்தங்கள் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடுகின்றமை குறிப்பிடதக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!