கென்யாவில் வெள்ளம்:7 பேர் உயிரிழப்பு!

கென்யா தேசியப் பூங்காவில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கென்யாவில் உள்ள ஹெல் கேட் தேசிய பூங்காவில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 சுற்றுலாப் பயணிகளில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் தொடர்ந்து கனமழை பெய்ததையடுத்து, ஹெல் கேட் தேசியப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அந்தப் பூங்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த 13 பயணிகளில் 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், அவர்களுடன் சென்ற சுற்றுலா வழிகாட்டியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரை மீட்பதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளில் 5 பேர் கென்யாவைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஹெல் கேட் பூங்காவில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமான ஒன்று என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், வெள்ளம் ஏற்படுவதற்கான அறிகுறி தென்பட்டால், அதுகுறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கும் வகையில் அனைத்து வழிகாட்டிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஹெல் கேட் பூங்காவில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கென்யாவைச் சேர்ந்த 7 இளைஞர்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!