கைக்குண்டு, பொலிஸ் சீருடை கண்டெடுப்பு!

கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான வீதியின் போகீல் எட்டாம் கட்டை பகுதியில் கை குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உதவி பொலிஸ் பரிசோதகரின் சீருடை ஒன்றும் நாவலப்பிட்டி பொலிஸாரினால் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை குறித்த கை குண்டை செயலிழக்கச் செய்வதற்கு நாவலப்பிட்டி பொலிஸாரினால் கம்பளை விசேட அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டனர்.

குறித்த கைகுண்டு எஸ்.எப்.ஜி-87 ரக கைகுண்டு என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!