கணினிக்கூடம் திறந்து வைப்பு!

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்க்பட்ட கணினிகூடத்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஒதுக்கிய சுமார் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குறித்த கனணிக்கூடம் நேற்று மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் முகமட் கமால் லாபீர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை குறித்த பாடசாலையில் காதர் மஸ்தானின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!