லிப்டில் சிக்கிய பாப்பரசர்!

எதிர்பாராத விதமாக லிப்டில் சிக்கிய பாப்பரசரை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.

வத்திகானின் சென்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இடம்பெறும் வாராந்த ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நிகழ்வினை நடாத்துவதற்காக பாப்பரசர் பிரான்சிஸ் வருகை தரும்போது, லிப்டில் சிக்கிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் பாப்பரசரை மீட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வத்திக்கானின் சென்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில இடம்பெறும் வாராந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்குகொள்வதற்காக பெருமளவான மக்கள் திரண்டிருந்தனர்.

இதன்போது, வழமையான நேரத்திலும் பார்க்க 7 நிமிடங்கள் தாமதமாக பாப்பரசர் பிரான்சிஸ் வருகை தந்திருந்தார்.

பாப்பரசரை பார்த்ததும் பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர், இந்நிலையில் பொதுகமக்கள் மத்தியில் உரையாற்றிய பாப்பரசர், தனது நேர தாமமத்திற்கு மன்னிப்பு கேட்டவாறு உரையினை ஆரம்பித்திருந்தார்.

அப்போது, தனது நேரதாமதத்திற்கு, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் லிப்டில் சிக்கியமையே காரணம் என குறிப்பிட்டார்.

அத்தோடு 25 நிமிடங்கள்; லிப்டிற்குள் சிக்கியிருந்த தன்னை தீயணைப்பு வீரர்களே மீட்டனர் என்றும், சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்குமாறும்
கேட்டுக்கொண்டார்.

இதனை செவிமடுத்த மக்கள் தங்கள் கைகளைத் தட்டி, தீயணைப்பு வீரர்களுக்கான வாழ்த்துக்களை தெரிவித்தனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!