வில்பத்தை மீட்க இராணுவத்தினரால் மரநடுகை!

மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவு இராணுவத்தினரின் ஏற்பாட்டில முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வில்பத்து மற்றும் அதனை அண்டிய காட்டுப் பகுதிகளில் மரங்கள் நடும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

வில்பத்து வனப்பகுதிகளில் சுமார் 2ஆயிரத்து 100 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் குறித்த பகுதியில் மரங்களை நாட்டி வைக்கும் திட்டம், தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்டையிலேயே, தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின், பிரிகேடியர் இந்திரஜித் பண்டார தலைமையில் இராணுவத்தினர் இணைந்து வில்பத்தை அண்டிய கல்லாறு வனப்பகுதியில் மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.

‘தேசிய வியத் பவறே’ நிறுவனம் இராணுவத்தினரின் இச்செயற்பாட்டிற்கு அனுசரனை வழங்கியிருந்தது.
குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள்,இராணுவ அதிகாரிகள், மதத்தலைவர்களும் என பலரும் கொண்டமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!