வவுனியாவில் விழிப்புணர்வு கருத்தமர்வு!

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் இளவது திருமணத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன், இளவயதுத் திருமணம் தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தமர்வொன்று நடைபெற்றுள்ளது.


வவுனியா மாவட்டச் செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வு நடைபெற்றது.

இளவயதுத் திருமணத்தின் தாக்கம் அதிகம் காணப்படும் காத்தார் சின்னக்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே இக்கருத்தமர்வு இடம்பெற்றது.

கருத்தமர்வில், மாவட்ட சிறுவர் மேம்பாட்டு அதிகாரி யே.ஜெயகெனடி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி செல்வகுமார், ஆகிய இருவரும் வளவாளராகக் கலந்து கொண்டு இளவயதுத் திருமணத்தினால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் சமூக சீர்கேடுகள் தொடர்பிலான கருத்துரைகளை வழங்கினர்.

நிகழ்வில் இள வயது யுவதிகள், பெண்கள், மற்றும் பொது அமைப்புக்களின் தலைவர்கள், காத்தார் சின்னக்குளம் கிராம சேவையாளர், கத்தார் சின்னக்குளம் சிறுவர் பாதுகாப்பு குழுவின் செயலாளர் தினேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!