யாழ்.மாநகர சபை, புதிய கட்டடம் தொடர்பில் முன்னாயத்தக் கூட்டம்!

எதிர்வரும் 7 ஆம் திகதி புதிய மாநகர சபைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் முன்னாயத்தக் கூட்டம், இன்று யாழ்ப்பாண மாநரக முதல்வர் தலைமையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்ற முன்னாயத்தக் கூட்டத்தில், நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், மாநரக முதல்வர் இமானுவல் ஆனல்ட், மாநகர ஆணையார் இ.த .ஜெயசீலன் மற்றும் யாழ்ப்பாணம் மாநரக சபையின் பொறியியலாளர்கள், பிரதம கணக்களார், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது, அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கான முன்னாயத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் 7 ஆம் திகதி காலை 10.45 மணியளவில் யாழ்ப்பாணம் மாநகரத்தின் புதிய கட்டத்திற்கான அடிக்கல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டி வைக்கப்படவுள்ளது.

2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மாநகரசபை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர முதல்வர் இமானுவல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில், பிரதமருடன் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்தோடு புதிய மாநகர கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு மாநகர மக்கள் மற்றும் பொதுமக்களுக்கும் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவல் ஆனல்ட் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!