அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு புதிய கட்டடம்!

நுவரெலியா அக்கரப்பத்தனை பிரதேச சபையின் புதிய கட்டத்தினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இன்று திறந்து வைத்தார்.


குறித்த புதிய பிரதேச சபைக்கட்டமானது பசுமலை ஹோல்புருக் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் எஸ்.கதிர்ச்செல்வனின் அழைப்பின் பெயரில், திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொண்டார்.

அத்தோடு, முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி.சக்திவேல், எஸ்.பிலிப் மற்றும் மத்திய மாகாண முன்னாள் தமிழக் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ் மற்றும் மஸ்கெலியா, நோர்வூட்,கொட்டக்கலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரேதச சபையின் தவிசாளர்களும் கலந்துகொண்டனர்.

அக்கரப்பத்தனை பிரதேசபை முன்னர் மெரேயா பகுதியில் உள்ள வாசிகசாலை கட்டத்தில் இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!