9 நிறுவனங்களுக்குகோப்பு குழுவில் முன்னிலையாக அழைப்பு!

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உட்பட 9 நிறுவனங்களை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னிலையாகும் இந்த நிறுவனங்களின் செயற்பாடு, முன்னேற்றம் குறித்து கோப் குழு விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைகழகம், ஹிஸ்புல்லாஹிற்கு சொந்தமான ஹிரா அறக்கட்டளை மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களே கோப் குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் நாளை கோப் குழுவில் முன்னிலையாகுவார்கள் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

மட்டக்களப்பு பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஹிரா அறக்கட்டளை அதிகாரிகள் செப்டம்பர் 17ஆம் திகதி முன்னிலையாகவுள்ளனர்.

தேசிய சேமிப்பு வங்கி மற்றும் மக்கள் வங்கியின் அதிகாரிகள் முறையே செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய திகதிகளில் கோப் முன் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அணுசக்தி ஆணையத்தின் அதிகாரிகள் செப்டம்பர் 18ஆம் திகதியும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக அதிகாரிகள் செப்டம்பர் 19 ஆம் திகதியும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கோப் அமர்வுகளை ஊடகங்கள் அறிக்கையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!