தர்மலிங்கத்தின் நினைவு நாள் இன்று!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 34 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.


யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் அக்கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் தலைமையில் இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.தொடர்ந்து, அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது.

இதன் போது தர்மலிங்கத்தின் நினைவுத் தூபிக்கு அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் மலர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நிறைவுத் தூபிக்கு மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராச, யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிறிசற்குணராசா, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் லலீசன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் உட்பட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!