“ஆசிய மதிப்பாய்வு வாரம்”ஆரம்பம் -இலங்கை சார்பாக திலகர் எம்பி பங்கேற்பு

ஆசிய நாடுகளின் மதிப்பாய்வு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் முகமாக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றுவதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா சீனா பயணமாகியுள்ளார்.

சீனா, யுனான் மாகாணத் தலைநகரமான குன்மிங் இல் இடம்பெறும் ஒரு வாரகால மாநாட்டில் ஆசிய நாடுகள் பலவற்றின் மக்கள் பிரதிநிதிகளும் உலகளாவிய மதிப்பாய்வு நிபுணர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கை அரசாங்கம்

சார்பில் கலந்து கொண்டு செவ்வாய்கிழமை இரண்டாம் நாள் அமர்வில் (செப்டம்பர் 3) இலங்கையில் மதப்பாய்வினை நிறுவனமயமாக்கல் ( Institutionalization of Evaluation in Sri Lanka ) எனும் அளிக்கை செய்து உரையாற்றவுள்ளார்.

2015 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு நுவரலியா மாவட்டத்தில் இருந்து தெரிவான திலகர் எம்பி அதற்கு முன்னர் ஆசிரியராகவும், முகாமைத்துவ ஆலோசகராகவும் பணியாற்றியவர். அந்த அனுபவங்களுடன் பொருளியல் முகாமைத்துவமும் கணக்கியல்லும் சார்ந்த தனது பட்டப்படிப்புக்கு ஏற்றவாறு மதிப்பாய்வு துறையை இலங்கையில் வளர்த்தெடுக்கும் வகையில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பாய்வு அமையத்தின் நிறைவேற்று உறுப்பினராக பல்வேறு நடவடிக்கைகைகளை மேற்கொண்டுள்ளார். மதிப்பாய்வுக்கான சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் அமையத்தின் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டுள்ள இவர் அந்த துறையில் ஈடுபடுவதற்கான தகைமைகளை விருத்தி செய்துகொள்ளும் முகமாக சுவிற்சலாந்தின் பேர்ன் பல்கலைக் கழகத்தில் IPDET (2018) எனும் சர்வதேச மதிப்பாய்வு பயிற்சி நெறியை நிறைவு செய்துள்ளார். இங்கிலாந்து, பூட்டான், கிரிகிஸ்தான், மியன்மார், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மதிப்பாய்வு தொடர்பான உரைகளையும் அறிக்கைகளையும் வழங்கிவரும் இவர் இப்போது சீனா பயணமாகியுள்ளார். இவருடன் நிதி அமைச்சின் இரண்டு அதிகாரிகளும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் பிரதி கணக்காய்வாளரும் கலந்து கொண்டுள்ளதுடன் இலங்கை அரசாங்கம் சார்பாக திலகர் எம்பி உரையாற்றவுள்ளார்.

மதிப்பாய்வு தொடர்பில் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கருத்துக்களை பகிர்ந்துவரும் இவர் மதிப்பாய்வு சட்டமூலத்தினை தயாரிக்கும் பாராளுமன்ற தெரிவு குழுவினதும் பிரதான உறுப்பினர் ஆவார்.

இலங்கையில் மதிப்பாய்வினை ஒரு தேசிய கொள்கையாக உருவாக்குவதில் அமைச்சர் கபிர் ஹாசிம், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி தலைமையிலான அணியினருடன் இணைந்து கடந்த 2018 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக அந்த கொள்கை அங்கீகரிக்கப்பட்டருப்பதுடன் “இவால் கொழும்பு – 2018″ சர்வதேச மாநாட்டினை இலங்கையில் நடாத்தி அதில் ” கொழும்பு பிரகடனமும்” “தேசிய கொள்கை” யும் வெளியீடு செய்யப்பட்டது.

மலையக நிலையில் பல்வேறு சட்டத்திருத்தங்கள் சட்டவாக்கங்கள் பிரேரணைகள் ஊடாக தனது பங்களிப்பு செய்துவரும் இவர் பொது நிதி குழு உறுப்பினராக தேசிய ரீதியாக பொருளாதார விடயங்களை உள்வாங்கி அவற்றை மதிப்பாய்வு முறைமையின் ஊடாக எதிர்வரும் காலத்தில் இலங்கை பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி சார்ந்த விடயங்களை நெறிமுறைப்படுத்துவதற்கும் தனது பங்களிப்பினை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!