பொத்துவில், ஊரணியில் விபத்து : ஒருவர் மரணம்

அம்பாறை பொத்துவில் பொலிஸ்ப்பிரிவுக்குட்பட்ட பொத்துவில் ஊரணி வீதி வளைவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து சம்பவமானது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதுடன், பொத்துவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் கோமாரியில் இருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்று இருப்பதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக தெரிய வருகின்றன.

இவ் விபத்தில் மரணமடைந்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிலின் முன் பகுதி வேறாகவும் பின் பகுதி வேறாகவும் இரண்டாக உடைந்து வீதியில் இருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தன.

இவ் விபத்தில் பொத்துவில் கோமாரியை சோர்ந்த 38வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஞானசூரியம் ரதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!