தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் காரைநகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே 48 கிராம அலுவலர் பிரிவில் தெரிவு செய்யப்ட்ட 18 பயனாளிகளுக்கான வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
காரைநகர் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
குறித்த நிகழ்வில் வீடமைப்பு அதிகார சபையின் யாழ் மாவட்ட பணிப்பாளர், கிராம அலுவலர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.(சி)