ஐ.தே.க மாநாடு நடக்குமா? பங்­கா­ளிக்­கட்­சிகள் அதி­ருப்­தியில்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் கட்சியின் வருடாந்த மாநாட்டை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிப்பதிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் திகதியே ஐக்கிய தேசியக் கட்சி உதயமாகியது. இதனால் அக்கட்சியின் வருடாந்த மாநாடு செப்டம்பர் 6 அல்லது அதனை அண்மித்த ஓர் தினத்திலேயே வழமையாக நடைபெறும்.

எனினும், இம்முறை மாநாட்டை நடத்துவதற்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

எனவே, இம்முறை 6 ஆம் திகதி மாநாடு நடைபெறாது என்றும், அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறலாம் என்றும் மேற்படி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக்கட்சி இரு அணிகளாக பிளவடைந்துள்ளன.

மேலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்­வதில் இழு­பறி நிலைமை நீடித்­து­வ­ரு­கின்ற சூழலில் விரைவில் இந்த விவ­கா­ரத்துக்கு தீர்­வு­காண வேண்டும் என ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றன. பங்­கா­ளிக்­கட்­சி­களை உள்­ள­டக்­கிய ஜன­நா­யக தேசியக் கூட்­ட­ணியை விரைவில் ஸ்தாபிக்க வேண்டும்.

என்றும் வேட்­பா­ளரை தெரிவு செய்ய வேண்டும் என்றும் பங்­கா­ளிக்­கட்­சிகள் வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்ற நிலை­யிலும் வேட்­பாளர் தெரி­வா­னது தொடர் இழு­பி­றி­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்குள் வேட்­பாளர் தெரி­விலும் ஜன­நா­யக தேசியக் கூட்­டணி அமைப்­ப­திலும் நீடிக்கும் இழு­பறி முரண்­பாட்டு நிலைமை தொடர்பில் பங்­கா­ளிக்­கட்­சிகள் அதி­ருப்­தியில் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!