புதிய சாதனைக்கு சொந்தக்காரராக மாறிய மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் .

இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் நேற்று இடம்பெற்றது, அதுவரை டி20 போட்டிகளில் 97 விக்கெட்டுக்களை மாத்திரம் பெற்றிருந்த மலிங்க நேற்றைய ஆட்டத்தில் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் பாகிஸ்தான் அணியின் ஸஹித் அப்ரிடி அவர் 98 விக்கட்டுகளுடன் முதல் இடத்தில் இருந்தார் தற்போது மலிங்காவின் சாதனையினால் அவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் லசித் மலிங்க 99 விக்கட்டுகளை கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார் , மூன்றாவது இடத்தில் பங்களாதேஷ் அணியின் சஹிப் அல்ஹசன் 88 விக்கெட்டுகளுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!