சு.க தொடர்பில், யாரும் கவலை கொள்ள வேண்டாம் : தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் ஒன்றிணைப்பது இலகுவான விடயம் அல்ல என, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று, குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இக்கருத்தை வெளியிட்டார்.

‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், ஜனாதிபதி என அனைத்து பதவிகளையும் வகித்துவிட்டு கட்சியை இரண்டாக பிளவடைய செய்துவிட்டனர்.

இதனை ஒன்றினைக்க வேண்டுமென தற்போது பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஆனால் அது மிகவும் கஷ்டமானது.

சம்பிக்க ரணவக்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை ஒன்றிணைப்பது கடினம். அதாவது அநுர – விமல் வீரவன்ச ஆகிய இருவருடைய கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிப்பது போன்றதொரு வேலையாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுப்பட்டு சென்றவுடன், மக்கள் விடுதலை முன்னணி காலையில் இருந்து இரவு வரை எங்களை திட்டுகின்றது.

நான் அவ்வாறு யாரையும் திட்டுவதில்லை. உண்மையை பேசுகின்றமையினாலேயே என்னை பெரும்பாலானோர் திட்டுகின்றனர்.

ஒன்றாக இணைந்து பயணிப்போமென பஷில் மற்றும் கோட்டா ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருவதற்காகவே தற்போது முயற்சிக்கின்றோம். அதாவது மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!