இனவாதம் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : பிரதமர்

கோஷங்கள் மூலம் இனவாதத்தை தூண்டி, நாட்டை கட்டியெழுப்ப முடியாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று, குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.

நான் மதகுகளை அமைக்க மாட்டேன், நான் மதகு அமைப்பவன் அல்ல. நாட்டை கட்டியெழுப்பவே நான் உள்ளேன்.

நாட்டை மதகுக்குள் கொண்டு செல்ல வேண்டுமானால் மதகு அமைப்பவர்களிடம் கையளியுங்கள். நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் எங்களுடன் வருமாறு நான் அழைக்கிறேன்.

நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டால், இந்நாட்டை கட்டியெழுப்ப முடியும். கூச்சலிட்டு, கோஷமிட்டு, இனவாதத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

நாம் இந்த அரசாங்கத்தை விட்டு தப்பிச் செல்லவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக இருந்தோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!