யாழ். புத்தக திருவிழா, இன்று நிறைவு பெற்றது.

கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமான யாழ். புத்தக திருவிழா, இன்று நிறைவு பெற்றது.


வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைய, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், புத்தக திருவிழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ ஒரு வார காலணம் சிறப்பாக இடம்பெற்றது.

30 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு இடம்பெற்ற புத்தக கண்காட்சியில், ஒவ்வொரு பிரிவிலும், பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள், வழிகாட்டி நூல்கள், ஈழத்துப் படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளுர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விற்பனையும் இடம்பெற்றது.


ஒரு வார காலம் இடம்பெற்ற கண்காட்சியில், அதிகளவான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றுக் கொண்டதாக, ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இறுதி நாளான இன்றையதினம், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கண்காட்சியை பார்வையிட்டார்.
அத்துடன், கண்காட்சியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிவர்களுக்கான பரிசில்களையும், ஆளுநர் வழங்கி வைத்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!