நாடளாவிய ரீதியிலான குற்றச்செயல்கள் : 3 ஆயிரத்து 265 பேர் கைது

நாடளாவிய ரீதியில், குற்றச் செயல்களை தடுப்பதற்காக, பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், சுமார் 3 ஆயிரத்து 265 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளுக்காக 14 ஆயிரத்து 695 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


இச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள், நேற்று அதிகாலை 2.00 மணி முதல் காலை 6.00 மணிக்கு இடைப்பட்ட மணி நேரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 401 பேரும், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் 882 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆயிரத்து 80 பேரும், வௌ;வேறு குற்றச் செயல்களை புரிந்தமை தொடர்பில் 767 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சட்டவிரோத மதுபான விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் 135 பேரும் உள்ளடங்கலாக 3 ஆயிரத்த 265 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 4 ஆயிரத்து 667 சந்தேக நபர்கள் மீது போக்குவரத்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!