50 ரூபா கொடுப்பனவு 10 ஆம் திகதி கிடைக்குமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கான 50 ரூபா கொடுப்பனவை, நிலுவை கொடுப்பனவுடன் வழங்குவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்து வருவதாக, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று, நுவரெலியா கொட்டகலையில், நிகழ்வொன்றில் பங்கேற்ற வேளை, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

நுவரெலியா கொட்டகலை லொக்கீல் தோட்டத்தில், நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்த, தோட்ட குடியிருப்புக்கு செல்லும் வீதி, அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வீதி புனரமைப்பு செய்யப்படாமை தொடர்பில், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கம்பெரலிய திட்டத்தின் ஊடாக, 30 இலட்சம் ரூபா செலவில், புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனை, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன், இன்று திறந்து வைத்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!