ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது : மனோ

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ?வேட்பாளர் தொடர்பில், இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும், தற்போது பெயரை வெளியிட முடியாது எனவும், அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


அப்புத்தளையில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் இக்கருத்தை வெளியிட்டார்.

‘ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு விடுக்கப்படவில்லை.

ஏனைய கட்சிகள் தமது வேட்பாளர்களை உடனடியாக அறிவித்திருந்தாலும், தற்போது அவர்களுக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறு அவசரப்படத் தேவையில்லை. எமது பயணத்தை நாம் மேற்கொள்வோம்.
யாரும் குழப்பமடைய வேண்டாம்.

எங்களது வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என எதிர்க்கட்சிக்கு கூறுகிறேன். எமது வேட்பாளர் யார் என்று நாம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தீர்மானித்து விட்டோம்.

ஆனால் அதனை தற்போது என்னால் கூற முடியாது. அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருங்கள்’                    என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!