மக்கள் சேவையில், ஜே.வி.பி முதலிடத்தில் : அநுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று, கொழும்பில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பில் இக்கருத்தை வெளியிட்டார்.

‘இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், தேர்தலை ஒத்திவைப்பதற்கு புதிய நகர்வுகளை மேற்கொள்வதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ஆனாலும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால், இதுவரை நடைபெற்ற தேர்தலை காட்டிலும் ஒரு தீர்க்கமான தேர்தலாக அது அமையக்கூடும்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள மக்கள் விடுதலை முன்னணியை காட்டிலும், ஏனைய கட்சிகள் ஒரே மட்டத்தில் உள்ளவைகளாகும்.

அத்துடன், முக்கிய அரசியல் கலந்துரையாடல்கள் இடம்பெறும் பாராளுமன்றத்தில் நாங்களும் இருக்கின்றோம். அவர்களும் இருக்கின்றார்கள்.

எங்களது உறுப்பினர்களைக் காட்டிலும், அரசாங்கத்தின் உறுப்பினர்களே அதிகம் உள்ளனர். ஆனால், நாட்டு மக்கள் பற்றி சிந்திந்து செயலாற்றுவது நாங்களே ஆகும்.

மே தின நிகழ்வு மற்றும் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும், அவர்களை விட உயர்வான இடத்திலேயே உள்ளோம்.
மக்களுக்கு சேவையாற்றும் விடத்திலும் நாங்களே முதலிடத்தில் உள்ளோம்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களைப் பார்க்கின்ற போது, அதிலும் அவர்களைவிட பல மடங்கு உயர்வாகவே உள்ளோம்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!