வவுனியாவில், சிந்தனை அரங்கம் நிகழ்வு!

வவுனியா தமிழ்ச் சங்கத்தின் சிந்தனை அரங்கம் நிகழ்வு, வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில், இன்று நடைபெற்றது.


இன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை, சிந்தனை அரங்கம் இடம்பெற்றது.

சேதனை விவசாயம் எனும் தொனிப்பொருளில், தமிழருவி த.சிவகுமாரன் தலைமையேற்று நடாத்தினார்.

ஆதி விநாயக் ஆலய பரிபாலன சபை பொருளாளர் பாலசுப்பிரமணியம் செல்வஉதயம், மங்கள விளக்கேற்றி வைத்ததுடன், அரங்கம் இனிதே ஆரம்பமானது.

அரங்கின் தொடக்கவுரையை, வவுனியா விவசாயத் திணைக்கள விதை மற்றும் நடுகைப் பொருட்கள் பிரதி விவசாயப் பணிப்பணிப்பாளர் தெட்சணாமூர்த்தி யோகேஸ்வரன் நடாத்தியிருந்தார்.

சித்தனையுரைகளை பாஸ்கரமூர்த்தி நேசராஜா, ஆறுமுகம் பிரபாகரன், முத்தையா நந்தகுமார், சிவசுப்பிரமணியம் பத்மநாதன் ஆகியோர் நடாத்தியிருந்தனர்.

நிகழ்வில், நகர சபை உறுப்பினர் பாலப்பிரசன்னா, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், வர்த்தகர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!