மட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்கள் திறந்து வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளியில் நேற்று மாலை பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் திறந்துவைக்கப்பட்டன.

குறுமண்வெளி வட்டவான் வீதி 15இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் குருமண்வெளி சிவமுத்துமாரியம்மன் ஆலய சுற்றுமதிலும் நான்கு இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

குறுமண்வெளிக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் வருகைதந்து குறித்த அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன்,குருமண்வெளி வட்டார உறுப்பினர் இளங்கோ உட்பட கிராம முக்கிஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் கம்பிரலிய திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதி மற்றும் ஆலயத்தின் சுற்றுமதில் என்பன திறந்துவைக்கப்பட்டதுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.

கம்பிரலிய திட்டத்தின் ஊடாக பத்து இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் குருமண்வெளி பொதுவிளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுவரும் பார்வையாளர் அரங்கின் நிர்மாணப்பணிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!