மின்சார சபையின் கிழக்கு பிராந்திய கிரிக்கெட் போட்டி!

இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண நலன்புரி சங்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட, மின்சார சபை உத்தியோகஸ்தர்கள், ஊழியர்களுக்கிடையிலான கிரிக்கெட்சுற்றுப்போட்டி நேற்று திருகோணமலை ஏகாம்பர மைதானத்தில் இடம்பெற்றது.

06 பந்துப் பரிமாற்றங்களைக்கொண்டதாக நடைபெற்ற இச் சுற்றுப்போட்டியில் 16 அணிகள் பங்குபற்றியிருந்தன.

இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்குள் திருகோணமலை டிஎம்சி மற்றும் மட்டக்களப்பு கிங்ஸ் ஆகிய அணிகள் நுழைந்திருந்தன.

இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு கிங்ஸ் அணி வெற்றியீட்டியது.

வெற்றியீட்டிய அணிக்கான கேடயத்தை, இலங்கை மின்சார சபையின் கிழக்கு பிராந்திய பொதுமுகாமையாளர் சமன் வீரசிங்க வழங்கினார்.

அத்தோடு, கிழக்கு மாகாண நலன்புரி சங்க தலைவர் மற்றும் பிரதம பொறியியலாளர்கள் ஆகியோரும் நேற்றைய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!