மட்டக்களப்பில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வானக விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 4மணியளவில் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணம் செய்த சிறியரக கெப்ரக வாகனமும், கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணம் செய்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

41 வயதுடைய ஓட்டமாவடியைச் சேர்ந்த இஸ்மயில் நூர்ஜான் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!