அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு:ஐவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் டெக்சாசில் மிட்லேண்ட் பகுதியில், பாரவூர்தி ஒன்றை கடத்த முயன்றவர்களால், பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு, 21 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார், கடத்தல்காரர்களை மடக்கிப்பிடிக்க முற்பட்டபோது, ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

30 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்சிக்சூட்டுச் சம்பவம் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தாக்குதல் சம்பவம் கோழைத்தனமான செயற்பாடு எனவும், துப்பாக்கிச்சூடு நடாத்தியவர்களை மன்னிக்க முடியாது எனவும் டெக்சாஸ் ஆளுநர் தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!