யாழ் மாநகரசபை கட்டடத்திற்கு அடிக்கல்!

யாழ்ப்பாணம் மாநகரசபை நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல், எதிர்வரும் 07ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவினால் நாட்டி வைக்கப்படவுள்ளது.

2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மாநகரசபை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர முதல்வர் இமானுவல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெறவுள்ளது.

யாழ். மாவட்ட செயலாளர் நா.வேதநாயகனின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த நிகழ்வில், பிரதமருடன் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை மாநகர முதல்வர், பிரதி முதல்வர், ஆணையாளர், பொறியியலாளர், பிரதேச செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் நேரில் பார்வையிட்டனர்.

குறித்த திட்டம் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!