சஜித் ஜனாதிபதியானால் மக்கள் பிரச்சினை தீரும்:ஹரீன் பெர்ணான்டோ

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வந்தால் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்று கொடுக்கமுடியும் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டுக்கு ஒரு சிறந்த தலைவர் இல்லாமையினால் நாட்டு மக்கள் இன்று அரசியல் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளபட்டுள்ளதாகவும், ஆகையால் தான் சஜித் பிரேமதாச போன்ற ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுகொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஏன் சஜித்பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குகிறோம் என்றால் அமைச்சர் சஜித்பிரேமதாச அவர்கள் தமது அரசியல் செயல்பாடுகளை இரவு 12மணிக்கு நிறைவு செய்து கொண்டால் மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கு மீண்டும் தமது கடமையினை ஆரம்பிப்பார் அதேபோன்று தான் அவருடைய தந்தையார் ரணசிங்க பிரேமேதாச அவர்களும் இருந்தார்.

தற்பொழுது இந்த நாடு பொருளாதார ரீதியில் கீழே தள்ளபட்டுள்ளது எனவே மீண்டும் நாடு எழுந்து வர வேண்டுமானால் சஜித்பிரேமதாச போன்ற இளம் அரசியல் வாதிகளே ஜனாதிபதியாக வரவேண்டும் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!