அரச மொழிகள் தினம்:விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில்!

மட்டக்களப்பு மாநகர சபையின் கலை கலாசார குழுவின் ஏற்பாட்டில் தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகர சபை கலைக் குழுத் தலைவரும், மாநகர உறுப்பினருமான வே.தவராஜா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்வில் முன்னிலை அதிதியாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாநகர சபை கணக்காளர், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சாபு நிர்வாக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

அரச மொழிகள் தினத்தை சிறப்பிக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வில் பேச்சாளர்களாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.துரைராஜசிங்கம், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவிரையாளர் கே.இரகுவரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

error: Content is protected !!