குருநாகலில் சஜித்தின் மக்கள் பலத்தை நிரூபிப்போம்:அஜித் பி பெரேரா

சஜித் பிரமேதாஸவுக்கான மக்கள் ஆதரவை எதிர்வரும் 05 ஆம் திகதி நிருபிக்கவுள்ளதாக அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் இடம்பெறும் மக்கள் கூட்டம் சஜித் பிரமேதாஸவின் ஆதரவினை எடுத்துக்காட்டும் என டிஜிட்டல் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

நுவரெலியா டிக்கோயா பகுதியில், சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு சேகரிக்கும் நிகழ்வு ஒன்று நேற்று இடம்பெற்றபோது, கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

சஜித்பிரேதாசவுக்கு ஆதரவாக இடம்பெறுகின்ற மக்கள் கூட்டங்கள் அனைத்தும் அரசியல் வாதிகளால் நடாத்தபடுவதில்லை, அமைச்சர் சஜித்பிரேம தாசவுக்கு ஆதரவாகவும் அவர் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகவும் குவிந்த மக்கள் கூட்டம் என்பதனை எதிர்வரும் 05ம் திகதி குருநாகல் பகுதியில் இடம்பெற உள்ள மக்கள் கூட்டம் எடுத்து காட்டும்.

மக்கள் பலம் இல்லாதவர்கள், மக்களுடைய ஆதரவு இல்லாதவர்கள், மக்களால் தூக்கி எறியபட்டவர்கள், மக்களுடைய பேரணியை குழப்ப, பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறார்கள்.

அந்த சூழ்ச்சிகளை நாம் சவாலாக ஏற்றுக் கொண்டு, சஜித் என்பவர் யார்? அவருக்கு எந்த அளவிற்கு பலம் இருக்கின்றது, சஜித்தோடு இருக்கின்றவர்கள் யார் என காட்டுவதற்கு, அந்த மக்கள் பேரணியை ஆயத்தப்படுத்தியது மட்டுமல்லாமல், பேரணியை வெற்றிகரமாக நடாத்தி காண்பிப்போம் என அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!