தலவாக்கலையில் விபத்து:இருவர் காயம்!

நுவரெலியா, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லிந்துலை நகரசபைக்கு முன்பாக நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

கந்தபொல பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கில் ஒன்றும், தலவாக்கலையிலிருந்து நகரசபை குறுக்கு வீதிக்கு திருப்ப முற்பட்ட முச்சக்கரவண்டியும் ஒன்றோடு ஒன்று மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள், சாரதியும் முச்சக்கரவண்டி சாரதியும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கில் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இதேவேளை, விபத்துக்குள்ளானவர்கள் சமரசமாக சென்றதனால், விபத்து தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

முச்சக்கர வண்டிச் சாரதிகள் முறையற்ற விதத்தில் பயணிப்பதே விபத்துகளுக்கு காரணம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!