கரைச்சி பிரதேச சபையின் நடமாடும் சேவை!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் ஊரகம் நோக்கிய உள்ளுராட்சி சேவைகள், நடமாடும் சேவையூடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஊரகம் நோக்கிய உள்ளுராட்சி சேவைகள் நடமாடும் சேவை நேற்று பாரதிபுரம் வட்டாரத்தில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள பாரதிபுரம் வட்டாரத்தை உள்ளடக்கிய வகையில் இலவச ஆயுள் வேத மருத்துவ முகாம், நாய்களுக்கான தடுப்பூசி மற்றும் இலக்கத்தகடுகள் வழங்கல், கட்டுமான பணிகளுக்கான அனுமதி, கிணறுகள் சுத்திகரித்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பாரதிபுரம் பொதுநோக்கு மன்டபத்தில் நடைபெற்ற இவ் நடமாடும் சேவையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிதன், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நடமாடும் சேவை மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் நன்மையடைந்தமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!