முஸ்லிம் மக்கள் சஜித்தையே ஜயாதிபதியாக்க வேண்டும் என விரும்புகின்றனர்

முஸ்லிம் மக்கள் உட்பட நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் இன பேதங்களை மறந்து நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவையே நிறுத்தி வெற்றிபெச் செய்ய வேண்டும் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில் முஸ்லிம் மக்களும் அமைச்சர் சஜித்தை வெற்றி பெறச் செய் தன்னிடம் விருப்பம் தெரிவித்ததாக சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் செமட்ட செவண 267வது அல்மினா மாதிரி கிராம வீடமைப்பு தொகுதி திறப்பு விழாவில் இன்று சனிக்கிழமை(31) கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்து இருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றகையில்,

நாட்டு முழுவதும் இன்று பேசப்படும் மனிதராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவே இருந்து வருகின்றார். முஸ்லிம் மக்கள் மன்றும் இன்றி நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சஜித் பிரேமதாசாவே ஜனாதிபதியாக வரவேண்டும் என விரும்புகின்றன.

இன்று சிலர் கூறுகின்றார்கள் சஜித் பிரேமதாசாவுக்கு நாட்டை ஆழுகின்ற ஆளுமை இல்லையென்று அப்படியானால் தற்போதன ஜனாதிபதி எப்படி வந்தார் அவர் சாதாரண ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் அமைச்சராக இருந்து ஜனாதிபதியாக வந்தவர்.

தேசிய அரசாங்கம் அமைத்தபோது அவரைக் கொண்டு வந்து தூக்கி வைத்த போது அவர் என்ன செய்திருந்தார். அமைச்சர் ஜனாதிபதி என்பதெல்லாம் பதவிக்கு வருகின்ற போது அதன் கட்டமைப்புக்களை அமைத்துக் கொள்ள முடியும்.

நான் அமைச்சராக பதவியேற்ற போது எனக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது சுகாதார அமைச்சின் செயற்பாடுகளை புரிந்து கொள்வதற்கு இன்று நான் நாடுபூராகவும் சிறப்பாக சுகாதார அமைச்சை முன்னெடுத்து வருகின்றேன்.

ஜயனாதிபதி தேர்தல் டிசம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ளது இந்நிலையில் ஏழை மக்களுடன் மக்களாக இருந்து நாடு முழுவதும் சேவை செய்யக்கூடிய தூய கரங்கள் உடைய ஒருவரை நாம் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என இராஜங்க அமைச்சர் பைசால் காசிம் மேலும் தெரிவித்து இருந்தார்.

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!