இன,மத மொழி ரீதியாக நாட்டை பிரிக்காது இலங்கையை கட்டியெழுப்புவேன்

இலங்கை நாட்டை எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவில் வழியில் முன்னெடுத்து செல்வதுடன் நாட்டில் இன,மத,குல,ஜாதி,மொழி பேதமன்றி ஒன்றுமைப்பட்ட நாட்டுக்குள் மாகாணசபைக்களுக்கான முழுமையான அதிகாரங்களை வழங்கி மக்கள் பலத்துடன் புதியதொரு நாடாக இலங்கையை மாற்றப் போவதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் செமட்ட செவண 267வது அல்மினா மாதிரி கிராம வீடமைப்பு தொகுதியை இன்று சனிக்கிழமைகாலை(31) திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் தெரிவித்து இருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றகையில்,

இந்த நாட்டில் காணப்படுகின்ற 13வது மாகாணசபை அதிகாரம் சக்தியற்று காணப்படுகின்றன இதனை சக்தி மிக்கதாக மாற்றியமைக்க வேண்டும். இதனூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் தேர்தல் காலங்களில் மாத்திரம் இதனை பேசிவிட்டு பின்னர் மாகாணசபைகள் தொடர்பாக யாரும் கண்டு கொள்வதில்லை.

அரசியல் தலைமைகள் 13 பிளஸ் வழங்குவதாக வெளிநாட்டிலும், உள்நாட்டில் 13 மைனஸ் தொடர்பாகவும் பேசுகின்றனர். உலக நாடுகளுக்கு ஒரு கதையும், உள்நாட்டில் ஒரு கதையுமாக இடத்திற்கு இடம் மாறுபட்டு ஏமாற்றுக் கதைகளை பேசி வருகின்றனர். நான் அவ்வாறு அல்ல சொல்வதைச் செய்வேன் என்னை மக்கள் நம்பலாம்.

இந்த நாட்டை நான் ஒருபோதும் பிரிவினைக்கு இட்டுச் செல்லாதும் மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ பிரிவினைகளை ஏற்படுத்தும் அரசியல் கலாசாரத்தை அடியோடு ஒழித்து நாட்டு மக்களை பிரிவினையில் இருந்து மீட்டு எடுத்து ஒரே நாட்டுக்குள் இலங்கை மக்கள் என்ற மன உறுதியுடன் நாட்டை ஒன்றுமைப்படுத்தி மகிழ்ச்சியான அழகிய தேசமாக இலங்கை நாட்டை கட்டியெழுப்புவேன் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்து இருந்தார்.

இந்நிகழ்வில் மதகுருமார்கள், இராஜங்க அமைச்சர் எம்.சீ.பைசால் காசிம்,கிழக்கு மாகாணசபைத் தலைவர் சந்திரதாச கலப்பத்தி திருக்கோவில் பொத்துவில் பிரதேசசபை தவிசாளர்களான இ.வி.கமலராஜன்,எம்.எஸ்.அப்துல் வாசித், சபை உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உட்பட அரச அதிகாரிகளும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டு இருந்தனர்.

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!