ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய குழு ஒன்றை நியமித்தது இ.தொ.கா

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பல்வேறுகட்சிகளுடன் அடுத்தவாரம் முதல் பேச்சி வார்தையில் ஈடுபடப்போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஊவாமாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் முன்னால் மத்தியமாகாண அமைச்சர் மருதபாண்டி ஆகியோரின் தலைமையில் குறித்த குழு நியமிக்கபட்டுள்ளது.

மேலும் மலையக மக்களின் எதிர்கால முன்னேற்றம் குறித்து பல்வேறு கோரிக்கைகளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுடன் கலந்துறையாட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது

இதற்கமைய தற்போது சில கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அடுத்தவாரம் முதல் பேச்சிவார்தைகள் ஆரம்பிக்கபடவுள்ளதாகம் இணையதளம் ஒன்றிட்க்கு ரமேஸவரன் மருதபாண்டி தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!